ஏறாவூரில் இலவச வைத்திய சேவை!

முதியோர்களது நலன்கருதி சமூக வலுவூட்டல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இலவச வைத்திய சேவை  மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதியோர் செயலகம் இச்சேவையினை கிராம சேவையாளர் பிரிவுகள் தோறும் நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் மீராகேணி கிராமத்தில்பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்ஏசி. நஜிமுதீன் தலைமையில் நடைபெற்ற முதலாவது இலவச வைத்திய முகாமில் சுமார் நூறு முதியோர்கள் வைத்திய சேவையினைப் பெற்றுக்கொண்டனர்.

பொதுவான நோய்களுக்கான வைத்திய பரிசோதனை மற்றும் பல் வைத்தியம் என்பன இங்கு நடைபெற்றதுடன் இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலை டாக்டர் எச்எம்எம். மௌஜுத் , பல் வைத்தியர் எம்பிஎம். முபீஸ், தாதி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்எம்எஸ். றமீஸா ஆகியோரும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.வயோதிபர்கள் தூரஇடங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று சேவையைப் பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கும் சிரமங்களையும் சுகாதார மேம்பாட்டினையும்  கருத்திற்கொண்டு இவ்வைத்திய முகாம் நடாத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூரிலுள்ள 15 கிராம சேவiயாளர் பிரிவுகளிலும் மாதந்தோறும் ஒரு வைத்திய முகாம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.(ம)

Recommended For You

About the Author: Nasar

error: Content is protected !!