வவுனியாவில், யானையின் சடலம் மீட்பு

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்குற்பட்ட கோரமோட்டை குளக்கரையில் காயமடைந்த நிலையில் காட்டு யானையின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எல்லையோர கிராமமாக காணப்படும் கோரமோட்டை கிராமத்தில் அதிகளவான யானைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிராமத்தில் வேட்டைக்குச் சென்றவர்களினாலோ அல்லது வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துவக்கு வெடித்ததனாலோ யானை இறந்திருக்கலாம் என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த விடையம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களும் வன பாதுகாப்புத் துறையினரும் ஆராய்ந்து வருகின்றனர்.

இதேவேளை வவுனியா வடக்கு காஞ்சுரமோட்டை, ஒலுமடு, சேனைப்புலவு, மருதோடை, ஊஞ்சால்கட்டி, வெடிவைத்தகல் போன்ற எல்லையோரக் கிராமங்களில் விவசாய பயிர்களையும் காட்டு யானைகள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!