நுவரெலியா காசல் ரீ நீர்த்தேக்கத்தில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு.

நுவரெலியா மாவட்டம் காசல் ரீ நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் சிசுவின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

காசல் ரீ நீர்த்தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் டிக்கோயா ஆற்றுப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், நீர்த்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த ஆண் சிசுவின் சடலத்தை ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சிசுவின் சடலம் தொடர்பில் ஹட்டன் நீதிமன்ற நீதவான் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலம் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
சிசுவின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில், ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!