மட்டு. குமாரபுரம் முதலாம் குறுக்கு வீதியின் புனரமைப்பு பணி ஆரம்பம்

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட குமாரப்புரம் முதலாம் குறுக்கு வீதியினை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு குமாரப்புரம் கிராம மக்களினால் மாநகர சபையின் 7 வட்டார உறுப்பினர் பி.ரூபராஜனிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் 15 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த வீதியினை கொங்ரீட் வீதியாக புனரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாநகர சபை ஊடாக புனரமைக்கப்படும் வீதியினை மாநகர சபை உறுப்பினர் அழைப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர சபை பொறியிளாளர் திருமதி சித்திரா தேவி லிங்கேஸ்வரன், மாநகர சபை உறுப்பினர் கே.ரகுநாதன் ஆகியோர் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!