இயல்பு நிலைக்கு திரும்பும் ஜம்மு காஷ்மீர்

ஜம்மு – காஷ்மீர்  மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370- தை மத்திய அரசு நீக்கியது. இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாக பாதுகாப்பு காரணங்கள் கருதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கூடுதலாக 40,000 வீரர்கள் குவிக்கப்பட்டனர். தீவிரவாத அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும், இதர பகுதிகளுக்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

கல்வி நிலையங்கள்,  சந்தைகள் மூடப்பட்டன. தீவிரவாதிகளின் தகவல்  தொடர்புகளை முடக்கும் வகையில் செல்போன்,  தொலைபேசி மற்றும் இணையத்தள சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன. கடந்த 4-ஆம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில் படிப்படியாக தளர்த்திக்கொள்ள அம்மாநில அரசு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஜம்மு, ரியாசி, சம்பா, கத்துவா, உதண்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் 2ஜி இணையதள சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

தலைநகர் ஸ்ரீநகர், ரம்பன், கிஸ்துவா,  தொடா, ரஜோரி ஆகிய மாவட்டங்களில் தொலைபேசி சேவைகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. மொத்தமுள்ள 22 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக மாநில அரசு நிர்வாகம் கூறியுள்ளது. 5 மாவட்டங்களில் இரவு நேரத்தில் மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் பகுதி வாரியாக மீண்டும் செயல்பட தொடங்கிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!