ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டமைப்பு உருவாக்கம் தொடர்பாக தீர்மானிக்கும் கலந்துரையாடல் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

குறித்த கலந்துரையாடல் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இன்று(சனிக்கிழமை) காலை நடைபெற்று வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கலந்துரையாடலில் புதிய கூட்டணி உடன்பாட்டில் கைச்சாத்திடப்படும் திகதி குறித்து முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் கூட்டணியின் யாப்பு தொடர்பாகவும், இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடன்பாட்டில் கையெழுத்திடப்படும் திகதி, ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் திட்டம் குறித்தும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.