அம்பாறையில், சீரற்ற காலநிலையிலும் தொடரும் மீன்பிடி

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, வானிலை அவதான நிலையம் மற்றும் கடற்தொழில் அமைச்சு, ஆகியவற்றால் கடலுக்கு செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்ட கல்முனைக் கடற்கரைப் பிரதேச ஆழ் கடல் மீனவர்கள் தமது தொழிலை அறிவுறுத்தலை ஏற்காது மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் கடலில் அதி கூடிய காற்றும் கடலலைகளும் இருந்தாலும் தங்களின் வாழ்வாதாரத்தை தாங்களே கவனிக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்து கடலுக்கு செல்வதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!