நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படும் வகையிலான, பொருத்தமற்ற கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு, தான் அனைவருக்கும் வேண்டுகோள் விடுப்பதாக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல், இலங்கை இராணுவத்தின் விசேட படையணிக்கு, ஜனாதிபதி மற்றும் ரெஜிமென்ட் வர்ணமளிப்பதை அடையாளப்படுத்தும் விருது விழாவில் இவ்வாறு குறிப்பிட்டார்.
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக, தாய் நாட்டினதும் மக்களினதும் எதிர்காலம் பாதிக்கப்படத்தக்க கருத்துக்களை எவரும் வெளியிடக்கூடாது.
தேசிய பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக, முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறையினர் ஆற்றிவரும் பணிகள் பாராட்டுக்குரியது. ஒட்டுமொத்த தேசமும் என்றும் படையினருக்கு கடமைப்பட்டுள்ளது.
கீழ்த்தரமான அரசியல் தேவைகளுக்காக, படையினரின் அளப்பரிய சேவையை குறைத்து மதிப்பிட இடமளிக்க முடியாது.
அன்று இராணுவத்திற்கு தலைமைத்துவத்தை வழங்கியவர்களே, இன்று குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய, அத்தகைய முறையற்ற கருத்துக்களை வெளியிடுதல் தொடர்பில் நான் பெரிதும் கவலை அடைகின்றேன்.
தற்போது அரசாங்கம், பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து, தேசிய பாதுகாப்பை உயரிய அளவில் உறுதி செய்திருப்பதுடன், மீண்டும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு இலங்கையில் இடமளிக்கப் போவதில்லை. (007)
என தெரிவித்தார்.