நல்லூரில் பொருத்தப்பட்ட ஸ்கானர் இயந்திரங்கள் அகற்றப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில், பாதுகாப்பு சோதனைகளுக்காக, நேற்று புதிய ஸ்கேனர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, இன்று அவை அகற்றப்பட்டுள்ளது.


ஆலய திருவிழாவை முன்னிட்டு, இம்முறை அதிகளவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கமைய, ஆலயத்திறகு வருபவர்களிடம் விசேட சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நிலையில், பொலிஸாரின் இந்த சோதனை நடவடிக்கைகள் காரணமாக, ஆலயத்திற்கு செல்கின்ற அடியவர்கள், பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக, வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனையடுத்து, பொது மக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக, புதிய ஸ்கானர் இயந்திரங்களை, ஆலய சூழலில் பொருத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள, ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

அதற்கமைய, பத்தாம் திருவிழாவான நேற்று, புதிய ஸ்கானர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை, நகைகள், ஊசிகள் என சிறு உலோகங்களுக்கும் எச்சரிக்கை ஒலி எழுப்புவதனால், இன்று காலை மீண்டும் அகற்றப்பட்டுள்ளன. (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!