பயிற்சி நெறிகளை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு !

சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் தொடர்பான முதல் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்த விடுதி உரிமையாளர்கள் மற்றும் விடுதியில் கடமை புரியும் ஊழியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் உள்வாங்கப்பட்ட, வளர்ச்சிக்கான திறன்கள் திட்டத்தின் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலா துறையினை மேம்படுத்து வகையில் சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் தொடர்பாக விடுதி உரிமையாளர்கள், விடுதியில் கடமை புரியும் ஊழியர்களுக்கு முதல் கட்டமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதம நிறைவேற்று அதிகாரி கே.குகதாஸ் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் குழுத்தலைவர் டேவிட் எப்லட், இலங்கை வணிக ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் ஜித் பி.பெரேரா, தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை முகாமையாளர் எஸ்.எ.எம்.சலீம், உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான மாவட்ட முகாமையாளர் மெரீனா உமேஷா மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் உத்தியோகத்தர்கள், சுற்றுலாத்துறை விடுதி உரிமையாளர்கள், விடுதிகளில் கடமை புரியும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!