தெய்வீக சுகானுபவம் பயிற்சிப் பட்டறை, இன்று முல்லையில்

தெய்வீக சுகானுபவம், பயிற்சிப் பட்டறையும், பரதநாட்டிய அளிக்கையும், முல்லைத்தீவு கரைத்துறைப்பற்றில் இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகம், இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயம் மற்றும் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சுடன் இணைந்து, தெய்வீக சுகானுபவம் – 8 நிகழ்வை, வழமைபோன்று இந்த வருடம் நடத்தி வருகின்றது.

அதனடிப்படையில், 14 மற்றும் 15 ஆம் திகதிகளிலும், இன்றும் நிகழ்வு நடத்தப்பட்டது.

முதலாம் நாள் பயிற்சிப்பட்டறை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்திலும், மாலை பரதநாட்டிய அளிக்கை நல்லூர் சங்கிலியன் தோப்பிலும் இடம்பெற்றது.

இரண்டாம் நாளை காலை, கிளிநொச்சியில் பயிற்சிப் பட்டறையும், மாலை இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பரதநாட்டிய அளிக்கையும் இடம்பெற்றது.

மூன்றாம் நாளான இன்று காலை, முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபை கலாசார மண்டபத்தில், பயிற்சிப் பட்டறையும், பரதநாட்டிய அளிக்கையும் இடம்பெற்றது.

முதன்மை விருந்தினர்களாக, யாழ். இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரும்,

சிறப்பு விருந்தினராக, கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி உமாமகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில், வடக்கு மாகாண கலை பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ், மாகாண கல்வி அமைச்சின் கலாசார உத்தியோகத்தர்கள் முன்னிலையில்;, மூத்த கலைஞர்கள், நடன ஆசிரியர்கள், யாழ். பல்கலைகழக நடனத்துறை மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், என 500 ற்கும் மேற்பட்ட கலை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!