யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி குழுக்கூட்டம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதில், வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மற்றும் வடக்கு மாகாண திணைக்களங்களின் செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், பொலிஸ், இராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.(007)