யாழ். பலாலி விமான நிலையம் தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், பலாலி விமான நிலையத்தில் இடம்பெற்றது.


இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் சிவில் விமான சேவைகள் போக்குவரத்து அமைச்சு அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது, விமான நிலைய புனரமைப்பு பணிகளையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.


இந்தக் கலந்துரையாடலில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம், விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்பட்டதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!