ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களில், இன்னும் 60 முதல் 70 பேர் வரையில் கைது செய்யப்படவில்லை என, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேன ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று, நுவரெலியா கினிகத்தேன விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் போது இக்கருத்தை வெளியிட்டார்.
50 ற்கும் மேற்பட்ட விகாரைகளுக்கு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக, எமக்கு 2010 ஆம் ஆண்டு தகவல் வந்தது.
அந்தக் காலப்பகுதியில், அனைத்து இடங்களுக்கும் நாம் தகவல் வழங்கினோம்.
இதுபோன்ற குண்டுத் தாக்குதலின் மூலமாக, எமது சமூகம், எமது எதிர்கால சந்ததியினரின் எதிர்காலம் இல்லாமல் போய்விடும்.
ஆகையால் தான், எமது மக்களை நாம் விகாரைகளுக்கு அழைத்து தெளிவுபடுத்துகிறோம்.
நாங்கள் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில், எவருக்கும் கேள்வி எழுப்ப முடியாது. எமக்கு தற்பொழுது அபிவிருத்தி என்பது முக்கியம்.
ஆகையால் நாம் பொதுபல சேனாவை பலப்படுத்த வேண்டும். முஸ்லிம் மத தலைவர்கள், முஸ்லிம் மக்களை பள்ளிவாசல்களுக்கு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அழைத்து, அரசியல் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடியமானால், ஏன் எமக்கு முடியாது. என குறிப்பிட்டுள்ளார். (007)