நுவரெலியாவில், வீதி புனரமைக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா ஹட்டனில் இருந்து, எபோட்சிலி வரை செல்லும் 6 கிலோ மீற்றர் பிரதான வீதி, கடந்த 25 வருடங்களுக்கு மேலாக, மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.


இதனால், வீதியை புனரமைப்பு தருமாறு கோரி, பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 200 பேர் வரை, லெதண்டி தோட்டத்தின் மார்பரோ களனிவத்தை பிரிவில், பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எபோட்சிலி தோட்டத்தில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், இந்த பிரதான வீதி ஊடாகவே, ஹட்டன் நகரத்திற்கு சென்று, தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இந்த வீதி தொடர்பில், காலங்காலமாக மக்கள் அரசியல்வாதிகள் மற்றும் தோட்ட நிர்வாகங்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும், வீதியை சீர்திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த நிலையில், நுவரெலியா ஹட்டனில் இருந்து, எபோட்சிலி வரை செல்லும் 6 கிலோ மீற்றர் பிரதான வீதியை புனரமைத்து தருமாறு, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!