கிளிநொச்சியில் நிலக்கடலை அறுவடை நிகழ்வு

தேசிய உணவு உற்பத்தி ஜனாதிபதி வேலைத்திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட, நிலக்கடலை அறுவடை நிகழ்வு, கிளிநொச்சி பரமந்தனாறு பிரதேசத்தில், இன்று இடம்பெற்றது.


கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள பிரமந்தனாறு பகுதியில், மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட நிலக்கடலை அறுவடை நிகழ்வு நடத்தப்பட்டது.

நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன், கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன், கிளிநொச்சி மாவட்ட விவசாய பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால், நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் கீழ், நிலக்கடலை, உருளைக்கிழங்கு உள்ளிட்டவை, பிரதேசத்திற்கு ஏற்ப மானியமாக வழங்கப்பட்டு, விவசாயிகள் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!