ஐ.தே.க அரசினால், கொலைகளை தடுக்க முடிந்ததா? : அபயவர்த்தன

தியாகராசா மகேஸ்வரனின் கொலையை தடுக்க முடியாதவர்களாக, கோட்டபாய மற்றும் மகிந்த ஆகியோர் இருந்தனர் என கூறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, காமினி திஸ்ஸாநாயக்க, ரஞ்சன் விஜயவர்த்தன ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட போது தடுக்க முடிந்ததா? என்பதற்கும் பதிலளிக்க வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று, யாழ்ப்பாணம் திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சிக் கட்டடத்தில் புதிய கட்டடத்தை திறந்து வைத்த நிகழ்வில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரை தொடர்பில் கருத்து வெளியிடும் போது இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கு மாகாணத்தில் தெரிவித்த விடயங்கள் எமக்கு மிகுந்த கவலை அளிக்கின்றது. அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனின் கொலையினை மகிந்த ராஜபக்சவினாலோ அல்லது கோட்டபாய ராஜபக்சவினாலோ தடுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அவர் கொலை செய்யப்பட்டதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல தமிழ் மக்களை பார்த்து உங்களுக்கு அந்த காலப்பகுதியில் பாதுகாப்பு கிடைத்ததா? என்றும் கேள்வி எழுப்பினார். கவலையுடன் அவரிடம் சில கேள்விகளை தொடுக்க வேண்டிய தருணம் எமக்கு எழுந்திருக்கின்றது.

நாட்டின் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ படுகொலை செய்யப்பட்டார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட காமினி திஸ்ஸாநாயக்க படுகொலை செய்யப்பட்டார்.

பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயவர்த்தன படுகொலை செய்யப்பட்டார். இவர்களை படுகொலை செய்த போது பாதுகாப்பு வழங்கக் கூடியதாக இருந்ததா?
ஆனால் நாம் ஒன்றை பெருமையுடன் சொல்லுவோம்.

2009 மே மாதம் 19ம் திகதிக்கு பின்னராக, இந்த ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி வரையில் எங்காவது எப்போதாவது சம்பவங்கள் நடைபெற்றதா? இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு பலமாக இருந்தது.

2009 முதல் 2015 வரை எங்கும் குண்டு வெடிக்கவில்லை. யாரும் கொலை செய்யப்படவில்லை. யாருக்கும் எந்தப் பிரச்சினைகளும் ஏற்படவில்லை.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாட்டு மக்களுக்கு மிகுந்த விசுவாசம் இருந்தது.

அந்த நம்பிக்கை இல்லாமல் போனதற்கு காரணம் தேசிய பாதுகாப்பு இல்லாமல் செய்யப்பட்டமையே ஆகும். தேசிய பாதுகாப்பு இல்லாமல் போனது 2015ம் ஆண்டு முதல் கடந்த வருடங்களாக நடாத்தி வரும் ஆட்சியிலேயே.

இந்த ஆட்சிக்கு முன்பதாக யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் குண்டு வெடித்ததா? யாரும் கொலை செய்யப்பட்டார்களா? தேவையான அளவு பாதுகாப்பினை வழங்கு கூடிய நிலை இருந்தது. என குறிப்பிட்டுள்ளார். (0

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!