கோட்டபய ஸ்ரீ.சு.கட்சியின் உறுப்புரிமையை பெறவேண்டும் – திலங்க

கோட்டபய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையை பெறவேண்டும் அவரை நாங்கள் அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம் , அவருடைய தந்தை எங்களுடைய கட்சியை சார்ந்தவர் என பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்

விரைவில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதேபோல கோட்டபய ராஜபக்சவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளோம் .அதன் பின்னர் நாம் முக்கிய முடிவுகளை எடுப்போம், மேலும் ஏற்கனவே 25 விடையங்கள் தொடர்பாக நாம் கலந்துரையாடி முடிவுக்கு வந்துள்ளோம் , பொதுஜன பெரமுனவும் எங்களுடைய கோரிக்கைகள் பலவற்றை ஏற்றுக்கொண்டுள்ளது,

நாம் எப்போதும் ஐக்கிய தேசிய கட்சியை எதிர்க்கும் அணியாக தான் இருக்கின்றோம் அவர்களுக்கு எங்களுடைய ஆதரவு ஒருபோதும் கிடையாது எங்களுக்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மூன்று வழிகள் இருக்கின்றது அதில் ஒன்றை நாம் கட்டாயம் கடைப்பிப்போம்

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஒரு வேட்பாளரை அறிமுகம் செய்யும் எண்ணம் இருந்தது ஆனால் இப்போது பொதுஜன பெரமுன ஒரு வேட்பாளரை அறிமுகம் செய்துள்ளது எனவே நாம் ஒருபோதும் கோட்டபயவை தோல்வியடைய விடமாட்டோம்….
மேலும் ஒருபோது ஜனாதிபதிக்கு இருக்கக்கூடிய இடத்தை நாங்கள் யாருக்கும் வழங்கமாட்டோம் , வாசுதேவ நாணயக்கார கூறுவது போன்று பிரதி பிரதமர் பதவி ஒன்று இல்லை , எனவே நாங்கள் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!