கொழும்பு கிரான்ட்பாஸ் மாதம்பிட்டிய மயானப்பகுதியில் பாதாள உலககுழு உறுப்பினர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாதாள உலககுழு உறுப்பினரான ஆனமாலு ரங்க உட்பட மேலும் ஒரு பாதாள உலகக்குழு உறுப்பினர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த இரட்டைக் கொலையினை செய்தவர்கள் என்ற சந்தேகத்தில் மூவரை மட்டக்குளிப் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் வசமிருந்து கொலைக்கு பயன்படுத்தியதாக நம்பப்படும் வாள்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கொலை செய்வதற்கு வருகைதந்த முச்சக்கர வண்டி குடு ரொசானின் மனைவிக்கு சொந்தமானது என்பதை பொலிஸார் உறுதி செய்திருப்பதாகவும், இரண்டு குழுக்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கான காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(நி)