யாழில் அமைக்கப்படும் கலாசார மத்திய நிலையத்தை பிரதமர் பார்வையிட்டார்!

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுவரும் கலாசார மத்திய நிலையத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பார்வையிட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு வரும் கலாச்சார மத்திய நிலையத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்தார்.

இதன்போது அங்கு இடம்பெற்றுவரும் கட்டுமாணப் பணிகளை பிரதமர் பார்வையிட்டார்.

குறித்த விஜயத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மற்றும் இந்தியத் துணைத் தூதுவராலய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!