அம்பாறையில் 252 குடும்பங்களுக்கு காசோலைகள் கையளிப்பு!

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தமிழ் கிராமங்களைச் சேர்ந்த 252 குடும்பங்களுக்கு வீடுகளை புனரமைத்துக் கொள்வதற்கான காசோலைகள் கைளிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மக்களுக்கான காசோலையை வழங்கி வைத்தார்.

இதன்போது கோமாரி, மணல்சேனை, குண்டுமடு, வட்டிவெளி, ஊறணி மற்றும் இன்ஸ்பெக்டர் ஏற்றம் ஆகிய தமிழ் கிராமங்களை சேர்ந்த 252 பேருக்கு தலா 40ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், முதல் கட்டத்திற்கான காசோலைகள் மக்களிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளன.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!