மட்டக்களப்பில் விபத்து:மாடு உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில், வீதியில் நின்ற மாடு ஒன்று உயிரிழந்துள்ளதுடன், இரண்டு மாடுகள் பலத்த காயங்களுடன் இறக்கும் நிலையில் உள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் ஆயித்தியமலை – வாய்க்காலடிச்சேனை பிரதான வீதியில் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் வாகனம் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ள ஆயித்தியமலை பொலிஸார், விபத்து தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!