பொகவந்தலாவ – டின்சின் கலாசார மண்டபம் தங்களுக்கே சொந்தம் என்றும் எவரும் உரிமை கோரமுடியாது என்று வலியுறுத்தியும் டின்சின் தோட்ட மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பொகவந்தலாவ டின்சின் கலாசார மண்டபத்திற்கு முன்பாகவே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
பொகவந்தலால டின்சின் கலாசார மண்டபத்திற்கு நோர்வூட் பிரதேசபையை கொண்டுவந்தமை தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் எமக்கும் இல்லை என்று மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், இந்த கலாசார மண்டபமானது தோட்டமக்களுக்கென கட்டப்பட்டதாகவும், குறித்த மண்டபத்தை எவரும் உரிமைகோர முடியாது என்றும் ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை ஆர்பாட்டகாரர்கள் நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ரவி குழந்தை வேலுவைச் சந்தித்து மனு ஒன்றையும் கையளித்தனர்.
இதேவேளை நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ரவி குழந்தைவேல் கருத்து தெரிவிக்கையில், இந்த மண்டபமானது டின்சின்தோட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், ஆகவே இந்த மண்டபம் ஒரு வருடம் கடந்த பின்பு டின்சின் தோட்ட மக்களுக்கே கையளிக்கப்படும் என்று கூறினார்.
நோர்வூட் பிரதேச சபையை நோர்வூட் பகுதிக்கு கொண்டுசெல்ல அதற்கான காணி என்பன தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான மண்டபமும் வெகுவிரைவில் நோர்வூட்பகுதியில் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.(நி)