தங்களுக்கு ஆதரவு வழங்கினால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு பிரதி பிரதமர் பதவியை வழங்க தயாராக உள்ளதாகவும் இது தொடர்பாக தான் ஏனைய உறுப்பினர்களுடன் கலந்துரையாடியாதாகவும் பாரளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார் .
அரசியல் அமைப்பில் இதற்க்கு இடம் இல்லை என்றார்களும் ஒரு வெளிப்பதவியாகி பிரதி பிரதமராகா இருக்க முடியும் ,என்னுடடைய இந்த முடிவிட்க்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை….
அதனுடன் மொட்டின் தலைவராக மஹிந்த ராஜபக்ச பதவி ஏற்றதன் பின்னர் அவருடைய சு.க உறுப்புரிமை ரத்தாகின்றது அதனை தெளிவாக அமரவீர கூறியிருந்தார் .தற்காலிகமாக சில நடவடிக்கைகளை நாம் மேட்கொண்டுள்ளோம் , மேலும் இந்த ஊடக சந்திப்பில் ஐ.தே.காவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது அதற்க்கு பதில் வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்
சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யாவிட்டால் அந்த காட்ச்சிக்குள் பூகம்பம் வெடிக்கும் ,தெரிவு செய்தால் புயல் அடிக்கும் எப்படியிருந்தாலும் அதற்குள் குழப்பம் கட்டாயமாக வரும் அதேபோல தமிழ் மக்களின் பூரண ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார் .(சே)