மட்டு. வைத்தியசாலை கழிவுகளை புதைப்பதற்கான இடத்தினை தெரிவு செய்ய விசேட குழு.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கழிவுகளை புதைப்பதற்கான இடத்தினை தெரிவுசெய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கழிவகற்றல் பிரச்சினை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம், நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடாத்தப்பட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!