இஸ்லாம் அடிப்படைவாதத்திற்கு அடிபணிய வேண்டாம் என வலியுறுத்தி போராட்டம் – அத்துரலிய ரத்தினதேரர்

ஹிஸ்புல்லா பல்கலைக்கழகம் அரச உடமையாக்கப்படவேண்டும், இஸ்லாம் அடிப்படைவாதத்திற்கு அரசாங்கம் அடிபணியக்கூடாது, வடக்கு கிழக்கில் அரச நியமனங்களில் முஸ்லீம் இனத்தவருக்கு முன்னுரிமை வழங்குவதை நிறுத்த வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி எதிர்வரும் 19ம் திகதி மட்டக்களப்பு கிரானில் போராட்டம் நடைபெறும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதய அரசாங்கம் இஸ்லாம் அடிப்படைவாதிகளின் கீழ் செயற்படுவது தெளிவாக தெரிகின்றது. அரசியல் அழுத்தம் காரணமாக சி.ஐ.டி முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு ஆதரவான வகையில் செயற்படுகின்றனர். உதாரணமாக சட்டவிரோத கர்ப்பத்தடை செய்தமைக்காக வைத்தியர் சாபிக்கை கைது செய்தமைக்காக டிஐ.ஜி. கிட்சிறி ஜயலத், எஸ்.பி.மகிந்ததிஸ்ஸாநாயக்க ஆகியோருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது. பொலிஸ் ஆணைக்குழு இதனை செய்திருக்கின்றது. இது ஒரு பாரிய பிரச்சினை.

மறுபுறம் கிஸ்புல்லா தனது கல்லூரி அமைப்பதற்காக 1700 கோடி ரூபாய் பணத்தினை வெளிநாட்டிலிருந்து பெற்றிருக்கின்றார். இந்தப் பணம் எவ்வாறு கிடைத்தது. யார் கொடுத்தது. எங்கிருந்து வந்தது. என்பது தொடர்பில் எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வளவு பெருந்தொகை நிதியினை கொண்டுவந்தமை தொடர்பில் விசாரணை செய்ய சிஐடி வழக்கு தாக்கல் செய்தபோதும் அதனை விசாரணை செய்வதற்கு நேரம் இல்லை. ஆனால் வேறு வழக்குகளை விசேட நீதிமன்றம் அமைத்து விசாரணை செய்கின்றார்கள். இதுவும் ஒரு பாரிய பிரச்சினை. மட்டக்களப்பு கிஸ்புல்லா பல்கலைக்கழகத்தினை அரச உடமையாக்குவதற்கு இடமளிக்கப் போவதில்லை என கிஸ்புல்லா கூறுகின்றார்.

எனவே இந்த கிஸ்புல்லா பல்கலைக்கழகத்தினை உடனடியாக அரச உடமை ஆக்க வேண்டும் என வலியுறுத்தியும், இஸ்லாம் அடிப்படைவாதத்திற்கு கீழ் படியும் அரசாங்கத்திற்கு எதிராகவும், மேலும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அரச நியமனங்களில் முஸ்லீம் இனத்தவருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதற்கு எதிராகவும் ஆயிரணக்கான மக்களை அணிதிரள வேண்டுகின்றோம். இம்மாதம் 19ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மட்டக்களப்பு கிரான் பகுதியில் நடைபெறும் பேரணியில் ஆயிரக்கணக்கானனோர் அணிதிரள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!