யாழ். நல்லூரில் சோதனையை இலகுபடுத்த புதிய ஸ்கானர் இயந்திரம்.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய ஸ்கானர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆலய திருவிழாவை முன்னிட்டு இம்முறை அதிகளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆலயத்திறகு வருபவர்களிடம் விசேட சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பொலிஸாரின் இந்த சோதனை நடவடிக்கைகளால் ஆலயத்திற்கு செல்கின்ற அடியவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக வடக்கு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தது.

இதனையடுத்து பொது மக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக புதிய ஸ்கானர் இயந்திரங்களை ஆலய சூழலில் பொருத்துவதற்கு நடவடிக்கை ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

இதற்கமைய நல்லூர்க் கந்தனின் பத்தாம் திருவிழாவான நேற்று புதிய ஸ்கானர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!