நல்லூர் கந்தசுவாமி ஆலய திருமஞ்ச திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தில் நேற்று திருமஞ்ச திருவிழா நடைபெற்றது.

நேற்று மாலை நடைபெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் உள்வீதியுலா வந்த முத்துக்குமார சுவாமி, மாலை 6 மணிக்கு திருமஞ்சத்தில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். நல்லூர் கந்தனின் பத்தாம் நாள் திருவிழாவான மஞ்சத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!