ஒரு துறையில் மாத்திரம் தேர்ச்சி பெற்றவர் ஜனாதிபதியாக முடியாது-நளின்

குறிப்பிட்ட ஒரு துறையில் மாத்திரம் தேர்ச்சி பெற்றவர் நாட்டுக்கு உகந்தவராக இருக்க முடியாது என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், கனவு கண்டால் மாத்திரம் ஜனாதிபதியாக தெரிவாக முடியாது என கூறினார்.

´எமது கட்சியிலும் ஜனாதிபதியாகும் கனவோடு பலர் உள்ளனர், ஆனால் அந்த கனவை நனவாக்கும் ஒருவரையே நாம் வேட்பாளராக நிறுத்த வேண்டும்.

ஒருதுறையில் மாத்திரம் தேர்ச்சி பெற்றவர் ஜனாதிபதியாக வேண்டும் என எங்கும் சொல்லப்படவில்லை. எனவே அனைத்து துறைகளையும் இணைத்துக் கொண்டு பயணிக்க கூடியவரையே நாம் களமிறக்குவோம்.

அது தொடர்பில் அவசரப்பட வேண்டியதில்லை, இன்னும் இரண்டு வாரங்கள் தள்ளிப்போனாலும் பிரச்சினையில்லை.

எமக்கு புதிய பொருட்களை போன்ற குழு அவசியமில்லை, எமக்கு சிறந்த முறையில் விற்பனை செய்யக் கூடிய குழுவே அவசியம்.

அவ்வாறானவர்களை இறுதி சந்தர்ப்பத்திலும் களமிறக்கி விற்பனை செய்யவும் முடியும் எனவும் பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!