நிறைவுக்கு வருகிறது அத்திவரதர் தரிசனம்!

இந்தியா காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவடைவதால் இலட்சக்கணக்கான பக்தர்கள், அத்திவரதர் தரிசனத்தைப் காணச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அத்திவரதர் ஆலயம் அமைந்துள்ள நிர்வாக மாவட்டத்தில், பக்தர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

கோவிலில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் 3 கூடாரங்களும், கோவிலை ஒட்டி 3 கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரத்திற்கு வரும் பக்தர்கள் கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டு, பின் பேருந்துகள் மூலம் அத்திவரதர் தரிசனத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

கூடாரங்களில் மட்டுமின்றி, 46 இடங்களில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலைக்குள் காஞ்சிபுரம் நகருக்குள் வரும் அனைவரும் அத்திவரதரை தரிசித்த பின்னரே வைபவம் நிறைவடையும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அத்துடன், நாளை அதிகாலையில் தரிசனம் நிறுத்தப்பட்டு, கோவில் வளாகத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு, ஆகம விதிப்படி அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதரை வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் அத்திவரதர், மீண்டும் சயனிப்பதற்காக அனந்தசரஸ் குளம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை முதலாம் திகதி முதல் அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வருகிறது.

சயனகோலத்தைத் தொடர்ந்து, நின்ற திருக்கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!