காணி மீட்பு போராட்டத்திற்கு இம்மாதத்தில் தீர்வு

பொத்துவில் 60கட்டை கனகர் கிராம மக்களின் காணி மீட்பு போராட்டத்திற்கு இம்மாதத்திற்கு தீர்வு 150 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியும் கிடைத்துள்ளது
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலம் எப்போது பலவீனப்படுகின்றதோ அன்று தமிழர்களின் குரல் நசுக்கப்படும்.-எம்.பி.கோடீஸ்வரன் தெரிவிப்பு-

அம்பாறை பொத்துவில் 60கட்டை ஊரணி கிராம மக்களின் நீலமீட்பு போராட்டத்திற்கு இந்த ஓரிரு வாரத்திற்குள் தீர்வுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் 150பேருக்கு தங்களின் காணிகளில் வீடுகளை அமைப்பதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளதுடன் அதற்கான அனுமதிகளும் கிடைக்கப்பெற்று இருக்கின்றன என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் அவர்களின் தலைமையில் 252 பேருக்கு குறைவீடுகளை புனரமைப்புக்காகன காசோலைகளை வழங்கும் நிகழ்வில் வெள்ளிக்கிழமைமாலை (16) கலந்து கொண்டு உரையாற்றும் போதுதே மேற்படிக் கருத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தான் தனித்து நின்று இம் மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொப்பதோடு எனக்கு கிடைக்கின்ற நிதிகளைக் கொண்டு அனைத்து கிராமங்களின் அபிவிருத்திகளுக்கு பங்கிட்டு வருகின்றேன்

அம்பாறை மாவட்டத்தைப் பொருத்தமட்டில் யுத்தம் காரணமாக தமிழர் பிரதேசங்களின் எந்தவொரு அபிவிருத்திகளும் பாரியளவில் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில் எனக்கு கிடைக்கும் நிதியைக் கொண்டு என்னால் முடிந்தளவு அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றேன். இன்னும் பல முக்கிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன அதனையும் எதிர்வரும் வருடங்களில் மேற்கொள்வதற்கு முறையான திட்டங்களையும் தாம் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இந்த நாட்டில் தமிழ் மக்கள் எப்போதும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பயணிக்க வேண்டும் எப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலம் குறைவடைகின்றதோ அன்று தமிழர்களின் உரிமைக் குரலும் நசுக்கப்படும் என்பதனை தமிழ் மக்கள் மறந்துவிடக்கூடாது எனவும் அவர் அங்கு மேலும் தெரவித்து இருந்தார்.

 

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!