ரஸ்யாவில் விமானத்துடன் மோதிய பறவைகள்!

ரஷ்யாவில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பறவைகள் மோதியதில் விமானத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் 226 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்றே இவ்வாறு சேதமடைந்துள்ளது.

விமானத்தின் இயந்திரப் பகுதியில் சேதம் ஏற்பட்டதால், விமானம் அவசரமாக தரையிறக்கபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள விவசாய நிலப்பரப்பில் விமானம் தரையிறங்கியது.

இதன்போது, விமானத்தில் பயணித்த 23 பேர் சிறு காயங்களுக்கு உள்ளானார்கள்.

சுவோஸ்கி விமான நிலையத்தில் இருந்து – சிம்ஃபெரோபோல் விமான நிலையத்திற்குவிமானம் பயணித்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!