ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பதற்றம்!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் சுதந்திர தினத்தில் பாகிஸ்தான் இராணுவம் இந்திய நிலைகளின் மீது அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் கேஜி துறை பகுதியில் போர்நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது எனவும், உடனடியாக இதற்கு இந்திய இராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜம்மு காஷ்மீரின் வடக்கு பிராந்திய இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ‘சுதந்தர தினத்தினை முன்னிட்டு கடந்த சில நாட்களாக, எல்லைப்பகுதியில் பாகிஸ்தானால் ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனை இந்திய இராணுவம் முற்றிலும் எச்சரிக்கையாக முறியடித்துள்ளது.’ எனத் தெரிவித்தார்.(நி)

 

 

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!