மதுபோதையில் வாகனம் செலுத்தியோர் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில், கடந்த 5 ஆம் திகதி முதல் இன்று வரை 8717 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் ஆரம்பித்துள்ள நடவடிக்கையின் ஓர் அங்கமாக நேற்று காலை 6.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரையிலான 24 மணி நேர காலப் பகுதிக்குள் 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்நடவடிக்கை ஆரம்பமான கடந்த 5 ஆம் திகதி முதல் இன்று வரை 8717 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!