குருநாகலில் கையெழுத்துப் போராட்டம்!

குருநாகலில் கையெழுத்துப் போராட்டம்!குருநாகல் வைத்தியர் சாபி விவகாரத்தில், அரச அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு எதிராக, கையெழுத்துப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் சாபி விடயத்தில், விசாரணைகளை முன்னெடுத்த அரச அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு

எதிராக 10 இலட்சம் கையொப்பங்கள் திரட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வஹாபி சமய அடிப்படைவாதத்தின் கீழ் இல்லாமல் அரச கடமைபுரிபவர்கள், அரச அதிகாரிகளுக்கு தண்டனை

வழங்குவதற்கு எதிராக, மகஜர் ஒன்றைக் கையளிப்பதற்காக, கையொப்பம் திரட்டும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த கையெழுத்துப் போராட்டம், நேற்று குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

வடமேல் மாகாண மக்கள் சக்தி ஏற்பாட்டாளர் சட்டத்தரணி பியூமால் ஹேரத் இந்த கையொப்பம் திரட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

குருநாகல் வைத்தியர் சாபி விவகாரத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மூலம் பொலிஸ் சேவை ஆணைக் குழு ஊடாக, பொலிஸாருக்கு சாட்சி வழங்கும் விடயத்தில், மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து, குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திசாநாயக்க, பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிரி ஜயலத் ஆகியோருக்குத் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வைத்தியர் சாபிக்கு எதிராக, சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்க, நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமய அடிப்படைவாதிகளின் கீழுள்ள அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன், இந்த செயற்றிட்டம் மேலும் தூரத்திற்கு முன்னெடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விடயத்தில், பொது மக்களின் 10 இலட்சம் பேர்களுடைய கையொப்பங்களை திரட்டி பொலிஸ் சேவை ஆணைக் குழுவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வடமேல் மாகாண மக்கள் சக்தி ஏற்பாட்டாளர் சட்டத்தரணி பியூமால் ஹேரத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இக்கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள், குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு முன்னாலும், பிரதான பேருந்து நிலையம் மற்றும் கடிகாரக் கோபுரம் ஆகிய பகுதிகளுக்கு முன்னாலும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!