மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் இவர்தான்

உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க களமிறக்கப்படுவார் என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்சியின் பெரும்பான்மை ஆதரவு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு உள்ளதனால் அவரே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார் எனவும், எதிர்வரும் 18 ஆம் திகதி கொழும்பு, காலிமுகத்திடலில் இடம்பெறும், ஜே.வி.பி.யின் மாநாட்டின்போது அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் அக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணியினர் கடந்த 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி வேட்பாரளாக ரோஹன விஜேவீரவை களமிறக்கியது. அதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு நந்தன குணதிலக்கவை களமிறக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!