பலவந்தமாக மத ஸ்தலங்கள் அமைக்கப்படாது : பிரதமர்

பலவந்தமாகவோ அல்லது அநாவசியமான வகையிலோ, புதிதாக எந்தவொரு மத ஸ்தலங்களையும் ஸ்தாபிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், நல்லை ஆதீன குரு முதல்வரை சந்தித்த வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.

மதங்களுக்கு இடையில் தற்போது காணப்படும் புரிந்துணர்வு அற்ற தன்மையை இல்லாது செய்யும் பொறுப்பை, மத சபைகளுக்கு பொறுப்பாக்குவதாகவும், மத தலங்களை புனர்நிர்மானம் செய்வதற்கும், பாதுகாப்பதற்கும், தொல்பொருள் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இளம் தலைமுறையினரும், சிறுவர்களும், சிறந்த மத கொள்கை, சிறந்த அபிவிருத்தி செயற்திட்டம் உள்ளிட்ட விடயங்களுக்கு ஈடுப்படுத்தப்பட வேண்டும்.

அடிப்படைவாதம், வெறுப்புணர்வு உள்ளிட்ட விடயங்களில் இருந்து, இளம் தலைமுறையினரை மீட்டெடுக்கும் பொறுப்பு, மத போதனை நிறுவனங்களுக்கு உண்டு.

மத குருமார்கள் இவ்விடயங்களில் முழு கவனம் செலுத்த வேண்டும். என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு மாடிக் கட்டடத்தை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று மதியம் திறந்து வைத்தார்.

விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து, கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில், விவசாய அமைச்சர் பி.ஹரிசன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவல் ஆனால்ட் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது, இயற்கையால் அழிவுற்ற பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஏனைய விருந்தினர்களால், பொது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!