நுவரெலியா, காலசார மண்டப விவகாரம் : வீதிக்கு இறங்கிய மக்கள்

நுவரெலியா நோர்வூட் பிரதேச சபை, பொகந்தலாவ டின்சின் நகரத்தில் உள்ள கலாசார மண்டபத்திற்கு பலவந்தமாக கொண்டுவரப்பட்டமை தொடர்பில், ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியை வழி மறித்து, டின்சின் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.


டின்சின் சித்திவிநாயகர் ஆலய நிர்வாக சபையினால், இந்து கலாசார அமைச்சு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, அம்பகமுவ பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கு, டின்சின் கலாசார மண்டபம் தொடர்பில், எழுத்து மூலமான முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும், மண்டபம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, இந்து கலாசார அமைச்சின் ஊடாக, அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு, சுமார் ஒன்றறை மாதங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரையிலும் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படாமையை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது, பிரதான வீதியை வழி மறிக்க வேண்டாம் என, பொலிஸார் கோரிய போது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள், சித்திவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன் காரணமாக, ஹட்டன், பொகவந்தலாவ, பலாங்கொட ஆகிய பிரதேசங்களுக்கான போக்குவரத்து, சுமார் 30 நிமிடங்கள் தடைப்பட்டது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து உரிய தீர்வு கிடைக்காமையினால், நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!