2022 இல் எம் நாடும் எரிவாயு உற்பத்தி நாடாகும் : கபீர் காசிம்

2022ம் ஆண்டு எரிவாயுவினை உற்பத்தி செய்யும் நாடாக இலங்கை மாறும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் எரிவாயு கனியவளம் இருப்பது உறுதி செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எமது நாட்டில் எரிவாயு கனியவளம் இருப்பதாக நீண்டகாலமாக அறிந்திருக்கின்றோம். அது தொடர்பில் 20 முப்பது வருடங்களாக பேசிக் கொண்டிருக்கின்றோம். ஆயினும் அதனை பயனுள்ளதாக மாற்றுவதற்கு யாரும் எத்தணிக்கவில்லை. விரைவாக அதனைப் பெற்று பயன் பெறுவதற்கு கடந்தகால அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என நான் நினைக்கின்றேன்.

எனினும் எரிவாயு கனியவளத்தினை பெற்று எரிபொருளை எமது நாட்டில் உற்பத்தி செய்வதற்கான முழுமையான நடவடிக்கையினை நாம் எடுத்தோம். எமது கடின உழைப்பினாலேயே முதலாவதாக வெற்றி கண்டிருக்கின்றோம்.

மன்னார் வளைகுடாப் பகுதியில் மேற்கொண்ட ஆய்வுகளில் ஒரு தொகுதி எரிவாயு கனியவளம் இருப்பது சான்றாகியுள்ளது. 9றில்லியன் கனஅடி கனியவளம் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அது இன்னமும் அதிகரிக்கவும் கூடும்.

இந்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் ஆய்வினை மேற்கொண்டிருந்த நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் உடன்படிக்கையினை கைச்சாத்திட முடியும் என எதிர்பார்கின்றேன். எவ்வாறு எண்ணையினை பெற்று வினியோகம் செய்வது அதனை எந்த வகையில் பிரித்துக் கொள்வது என்பது சம்பந்தமாகவும் அந்த உடன்படிக்கையில் வரையப்படும். உடன்படிக்கை செய்யப்பட்டதன் பிற்பாடு 2020ம் ஆண்டு எரிவாயு கனியத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

அதன் பின்னராக 2022ம் ஆண்டு எரிவாயுவை உற்பத்தி செய்யும் நாடாக இலங்கை மாறும் என நம்புகின்றேன்.(007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!