வவுனியா கூமாங்குளம் பகுதியில் தேவாலயம் உடைப்பு

வவுனியா கூமாங்குளம் பகுதியில், இராயப்பர் தேவாலயம் ஒன்று உடைக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கூமாங்குளம் முறியாகுளம் பகுதியிலுள்ள, புனித இராயப்பர் தேவாலயம், விசமிகள் சிலரால் நேற்று இரவு உடைப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று மாலை தேவாலயத்திற்கு வழிபடச் சென்ற பொது மக்கள், சிலுவைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள பூச்சாடி, எரியூட்டப்பட்டிருப்பதை அவதானித்ததை அடுத்து, நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை தேவாலயத்தை நிர்வாகத்தினர் சென்று பார்த்த போது, தேவாலயத்தின் பின் பக்கமாக உடைக்கப்பட்டு, உள்ளே சிலர் சென்றுள்ளதாகவும், நிறப்பூச்சை பயன்படுத்தி, ஆலய சுவரில் தகாத வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளதை அவதானித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தெரியப்படுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி டம்பத் தலைமையிலான பொலிஸ் குழுவினர், மோப்ப நாயின் உதவியுடன் தேடுதலை மேற்கொண்டனர்.

ஆலயம் உடைக்கப்பட்டு, தகாத வார்த்தைகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளதாகவும், திருட்டுச் சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும், ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும் சம்பவம் தொடர்பில், எவரும் கைது செய்யப்படவில்லை என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.(007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!