சஜித் பிரேமதாச எண்கள் தெரியாமல் சம்பளத்தை அதிகரிக்க பார்க்கின்றார் – பந்துல குணவர்தன

சஜித் பிரேமதாச எண்கள் தெரியாமல் சம்பளத்தை அதிகரிக்க பார்க்கின்றார் அவர் மாதம் ஒன்றிக்கு அரச ஊழியர்களுக்கு 50,000 ஆயிரத்தை சம்பளம் வழங்க முடியும் என்று கூறியிருந்தால் அது சிறு பிள்ளை ஒன்றின் அறிவிப்பு போன்றது கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் 10,000 தருவதாக கூறி அதை வருடம் வருடமாக அதிகரித்தார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்

கொழும்பில் இன்று இடம்பெற்ற பொருளாதார ஆய்வு ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்

எங்களுடைய நாட்டில் வருடம் ஒன்றிற்கு அரச ஊழியர்களுக்கு வழங்கும் மொத்த சம்பளத்தின் அளவு 700 பில்லியன்கள் ஆகின்றது , ஓய்வூதியமாக வழங்கப்படுவது 215 பில்லியன்கள் இவை இரண்டுக்கும் 915 பில்லியன்கள் தேவைப்படுகின்றது , உள்ளவர்களிடம் இருந்து எவ்வாறு இல்லாதவர்களுக்கு எடுத்து கொடுக்க முடியும் ? சரத் பொன்சேகா சொல்வது போன்று சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகி 50,000 ரூபாவை அதிகரித்தல் மேலதிகமாக வருடம் ஒன்றிக்கு 900 பில்லியன்கள் தேவைப்படுகின்றது அதை எவ்வாறு எங்கிருந்து தேடப்போகின்றார்கள் ?

இலங்கை அரசின் வருடாந்த வருமான 2000 பில்லியன்கள் ஆகும் அதில் 1800 பில்லியன்களை சம்பளமாக வழங்கினால் நூற்றுக்கு 90 விகிதமான மின்சாரம் ,இலவச கல்வி ,சமூர்த்தி கொடுப்பனவு ,வீதிகள் புனரமைப்பு அனைத்தையும் நிறுத்திவிட்டு சம்பளத்தை மாத்திரம் வழங்கிக்கொண்டிருக்கலாம் இது ஒரு வேடிக்கையான விடையாமாக இருக்கின்றது கடன்களுக்கான வட்டிகளை அதிகம் செலுத்துகின்றார்கள் எனவே மக்களை ஏமாற்றும் அறிவிப்புகளை விடுப்பது தவறு என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார் .(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!