கிளிநொச்சியில் நடன பயிற்சிப் பட்டறை

யாழ் இந்தியத் துணைத்தூதரகத்தின் அழைப்பின் பேரில், கிளிநொச்சியில் நடன பயிற்சிப் பட்டறை ஒன்று, இன்று நடைபெற்றது.

யாழ் இந்திய துணைத் தூதரகமும், இந்தியக் கலாசார உறவுகளுக்கான பேராயமும், வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.

கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள கலாநிதி சிறி பரிமள் அசோக் பாட்கேயும், அவரது குழுவினரும் இணைந்து பரதநாட்டிய அளிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

பரதநாட்டிய கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் குறித்த பயிற்சி பட்டறையானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது பரநாட்டிய பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் யாழ் இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி மக்களின் கலை கலாசார் விடயங்களை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற வகையிலான வசதிகள் இல்லை எனவும், அதனை முன்னெடுப்பதற்கான வசதிகளை, இந்தியத் துணைத்தூதரகம் மேற்கொண்டு தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய யாழ் இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன்,
இவ்வாறான கலை, சமயம் சார்ந்த பல விடயங்களை தாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம் எனவும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கோரிய விடயம் தொடர்பில் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.(007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!