முல்லைத்தீவு மாவடடத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில், பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதும், சம்மந்தப்படட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில், ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், முல்லைத்தீவில் இயற்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்காக, ஜனாதிபதி செயலக அதிகாரிகள் விஜயம் செய்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், புவிச்சரியவியல் அளவியல் தலைமைப் பணியக அதிகரிகள் உள்ளிட்டோர், முல்லைத்தீவு – கேப்பாப்புலவு, நந்திக்கடல் கள்ளியடி மற்றும் பாவடைகல் ஆற்றுப்பகுதி, இருட்டுமடு, மூங்கிலாறு சுதந்திரபுரம் போன்ற பகுதிகளுக்கு சென்று, ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதன் போது, சட்டவிரோத நடவடிக்கைகளை பார்வையிட்ட அதிகாரிகள், பிரச்சினைகள் தொடர்ப்பில் விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். (007)