மன்னார் மடுத்திருத்தல ஆவணித் திருவிழா

மன்னார் மடுத்திருத்தல ஆவணித் திருவிழா, 5 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்களுடன், இன்று கொண்டாடப்பட்டது.
இன்று காலை 6.15 மணிக்கு, திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.


இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும் பதுளை மறை மாவட்ட ஆயருமான அதிவணக்கத்திற்குரிய வின்சன் பெனாண்டோ ஆண்டகையின் பங்கேற்புடன், மன்னார் மறை மாவட்ட கலாநிதி இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை தலைமையில், அனுராதபுரம் மறை மாவட்ட ஆயர் நோபட் அன்றாடி, குருணாகல் மறை மாவட்ட ஆயர் பெரல்ட் அன்ரனி பெரேரா ஆகியோர் இணைந்து, திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.


அதனைத்தொடர்ந்து, திருச்சொரூப பவனியும், ஆசீரும் இடம்பெற்றது.


முப்படையினரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில், 5 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர், இன்றைய திருவிழாவில் பங்கேற்றனர். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!