எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையைப் பறிக்கப்போவதில்லை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் .
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துளார்
மஹிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதில்லை எனவும்
இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டிருப்பதால், மஹிந்தவின் சு.க உறுப்புரிமை இரத்தாகுமெனவும் எனினும், மஹிந்தவின் உறுப்புரிமையைப் பறிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
மஹிந்தவின் சு.க உறுப்புரிமைப் பறிக்கப்பட்டால் அவர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படுமெனவும், பொதுஜன பெரமுனவுக்கும், தமதுக் கட்சிக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதால், பேச்சுவாரத்தைக்கு பாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டோம் என்றார்.
“எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் கிடையாது. பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை அவர் பெற்றுக்கொண்டது கவலையளிக்கிறது. இதனால், அவர் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். எனினும் அந்த நிலைமையை தாம் ஏற்படுத்தபோவதில்லை எனவும் தெரிவித்தார். (சே)