நுவரெலியாவில் குளவிகொட்டு: 7 பேர் வைத்தியசாலையில்!

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ பொகவான தோட்டப்பகுதியில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஏழு பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், பொகவந்தலால வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

குறித்த பெண் தொழிலாளர்கள் தேயிலை மலையில் தேயிலை கொழுந்த பறித்துக் கொண்டிருந்த வேளையில், தேயிலை மரத்துக்கு அடியில் இருந்த குளவிகூடு கலைந்து தொழிலாளர்களை தாக்கியதாக காயங்களுக்கு உள்ளான பெண் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குளவிகொட்டுக்கு இலக்கான பெண் தொழிலாளர்கள் குறித்து அச்சமடைய தேவையில்லை என வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.(007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!