பாவனைக்கு அனுமதி கிடைக்காது மயிலிட்டித் துறைமுகம் திறப்பு – மாவை எம்.பி ஆதங்கம்!

வலிகாமம் வடக்கில் பொதுமக்களின் நிலங்கள் சட்டப்போராட்டம் நடாத்தியதன் மூலமே மீட்க முடிந்தது என பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மயிலிட்டித்துறைமுக அபிவிருத்திப் பணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இவ்வாறு குறிப்பிட்டார்.

மயிலிட்டியில் நவீன மயப்படுத்தப்பட்ட மீன்பிடித்துறைமுகம், பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்படாத நிலையிலேயே திறந்து வைக்கப்படுவதை, மன ஆதங்கத்துடனே பார்க்க நேரிடுவதாகவும், விரையில் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தையண்டிய பகுதிகளில் மக்கள் தொழிலில் ஈடுபட நடவடிக்கை எடுப்போம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், மயிலிட்டி பிரதேசத்தை மக்களின் பாவனைக்காக முழுவதுமாக கையளிக்கப்படுவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மீன்பிடிக்கு அனுமதி வழங்கப்படாது திறக்கப்பட்ட, மயிலிட்டி துறைமுகத்தில், மீன்பிடி நடவடிக்கையை மேற்கொள்ள அனுமதியை பெற்றுக்கொடுக்க விரைவில் நடவடிக்கை எடுப்பேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம், மீனவர்களின் தொழில நடவடிக்கை மற்றும், மக்களின் செயற்பாடுகளுக்கு பூரண அனுமதி கிடைக்காது திறந்து வைக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஆதங்கப்பட்ட நிலையில், தனது உரையில் அதற்குரிய நடவடிக்கைகளை விரைவில் எடுப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

மயிலிட்டி மீனவர் துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதை எமது திட்டத்தில் உள்வாங்கிருந்தோம், மயிலிட்டி மீனவர் துறைமுகத்திற்கான அடிக்கல்லினை ஜனாதிபதி நாட்டிவைத்தார். நான் அதனை இன்று திறந்து வைத்துள்ளேன்.

மயிலிட்டியில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களில் 10 குடும்பங்களுக்கான வீட்டினை அமைத்திருக்கின்றோம். அதனை இன்று பயனாளிகளிடம் கையளிக்கும் அதேவேளை மீளக்குடியமர்ந்த 200 குடும்பங்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுக்கவிருக்கின்றோம்.

இப்பகுதியை சேர்ந்த ஒரு தொகுதியினர் வெளியிடங்களிலும் நலன்புரி முகாங்களிலும் தங்கியிருக்கின்றார்கள் என்பதை நான் அறிவேன். அவர்களை மீள அழைத்து வந்து இங்கே குடியமர்த்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

முதற்கட்டமாக மயிலிட்டி கிராமத்தில் 200 வீடுகளை அமைத்துக் கொடுத்து மக்களை மீளக்குடியமர்த்துவோம்;. ஏன் எனில் மீனவர்கள் இல்லாது மீன்பிடித்துறைமுகத்தினை அமைப்பதனால் பயன் இல்லை. மீனவர்களும் சுற்றிவர மக்களும் இருக்க வேண்டும் அப்போதுதான் அது சிறப்பாக அமையும்.

யுத்தத்தின்போது எம்மால் பயன்படுத்தப்பட்ட இடங்கள் அனைத்தினையும் விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம்.

பாதுகாப்புக்கு அவசியமான இடங்களை மட்டும் வைத்துக் கொண்டு ஏனைய இடங்கள் அனைத்தினையும் முடிந்தளவில் வழங்குவதற்கு இருக்கின்றோம்.

2015 முதல் தற்போது வரையில் வடக்கில் மட்டும் 45581 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பதாக 2009ம் முதல் 2015 வரையான காலப்பகுதியில் 34000 ஏக்கர் காணியினை விடுவித்திருக்கின்றோம்.

மொத்தமாக 80 ஆயிரம் ஏக்கர் காணியினை நாம் விடுவித்திருக்கின்றோம். தற்போது 2ஆயிரம் ஏக்கர் பாதுகாப்பு தரப்பினர் வசம் இருக்கின்றது. அவற்றிலும் 900 ஏக்கர் காணி யாழ்ப்பாணத்திற்குள் இருக்கின்றது. இந்த 900 ஏக்கர் காணி தொடர்பில்தான் பேச்சுக்களை நடாத்திக் கொண்டிருக்கின்றோம்.

அதில்தான் பிரச்சினைகளும் அதிகம் இருக்கின்றது. ஆயினும் அது தொடர்பில் கலந்துரையாடி முடிந்தளவில் காணியினை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.

இதேவேளை, மயிலிட்டி மண்ணை மீட்கும் எமது முதலாவது போராட்டத்தில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கெடுத்திருந்தார் என மயிலிட்டி மீனவ சங்க தலைவர் ஏ.குணபாலசிங்கம் தெரிவித்தார்.

வரலாற்றுடன் தொடர்புடைய மயிலிட்டி மண்ணை மீட்கும் எமது முதலாவது போராட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கெடுத்திருந்தார் என மயிலிட்டி மீனவ சங்க தலைவர் ஏ.குணபாலசிங்கம் தெரிவித்தார்.

நவீன மயப்படுத்தப்பட்ட மயிலிட்டித்துறைமுகத்தை, பிரதமர் மக்கள் மயப்படுத்தியதையடுத்து, இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மயிலிட்டி துறைமுகத்தில் பூர்த்தியான அபிவிருத்தி பணிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கையளித்தார்.

மிக நீண்டகாலத்தின் பின் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

1990 ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி மயிலிட்டி பிரதேச மக்கள் இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்தனர்.

இடப்பெயர்வுக்கு முன்னர் இலங்கையின் மீன் ஏற்றுமதியில் முக்கிய பங்கினை மயிலிட்டித் துறைமுகம் வகித்திருந்தது.

இந்நிலையில், யுத்தம் நிறைவடைநத பின்னர் பொதுமக்களின் போராட்டங்கள், சட்ட ரீதியான வழக்குகளின் பின்னர் பாதுகாப்பு தரப்பினரால் வலிகாமம் வடக்கில் பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டன.

இதனடிப்படையில் மயிலிட்டி பிரதேசம்,விடுவிக்கப்பட்டு, மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகள் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த புனரமைப்பு பணிகளின் முதற்கட்டமாக, மீன்பிடி வலை தயாரிப்பு நிலையம், சனசமூக நிலைய கட்டடம்,எரிபொருள் நிரப்பு நிலையம் என்பனவற்றின் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன.

பூர்த்தி செய்யப்பட்ட மயிலிட்டித்துறைமுக அபிவிருத்தி பணிகளை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க இன்று மக்களின் பாவனைக்கு கையளித்து வைத்தார்.

இந்நிகழ்வில், அமைச்சர் பி.ஹரிசன், இராஜாங்க அமைச்சர்களான வெதவாராய்சி, விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இமானுவல் ஆனல்ட், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி, வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் உட்பட அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!