வவுனியாவில் கட்டுதுவக்கு வெடிப்பு : ஒருவர் பலி

வவுனியாவில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செட்டிக்குளம், அரசடிக்குளம் பகுதியில் நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் அரசடிக்குளத்தைச் சேர்ந்த 52வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

நீண்டநேரமாகியும் தனது கணவர் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த மனைவி, அவரை பல இடங்களில் தேடியுள்ளார்.

இதன்போது அரசடிக்குளம் காட்டுப்பகுதியில் குறித்த நபர் சடலமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணையை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!