பொத்துவில் பிரதேசத்தில் புதிய சமூர்த்திப் பயனாளிகளுக்கு கொடுப்பனவு

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட வறுமை கோட்டின் கீழ்யுள்ள சுமார் 1191 சமூர்த்திப் பயனாளிகளுக்கு 32லட்சத்தி தொண்ணுற்றேழாயிரத்து ஜந்நுறு ரூபா தொகைநிதி சமூர்த்தி கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு பொத்துவில் சமூர்த்தி தலைமை முகாமையாளர் வி.அரசரெத்தினம் தலைமையில் இன்று வியாழக்கிழமை(15)சமூர்த்தி வங்கிகளான வடக்கு,தெற்கு வங்கிகளின் ஊடாக கொடுப்பனவு நிதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் அவர்கள் கலந்து கொண்டு புதிதாக சமூர்த்திப் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்ட சுமார் 1191 பேருக்கான ஓகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவுகளை வழங்கி வைத்திருந்தார்.இதன்போது வடக்கு,தெற்கு சமூர்த்தி வங்கி முகாமையாளர்களான எஸ்.சசிக்குமார்,எம்.ஏ.றஜீம் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!