திருகோணமலையில் ஹஜ் விளையாட்டு விழா!

திருகோணமலை – கிண்ணியா கடாபி விளையாட்டுக் கழகம் நடாத்திய ஹஜ் விளையாட்டு விழா, கிண்ணியா நகர சபை மைதானத்தில் நடைபெற்றது.

விளையாட்டு விழாவில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃறுப், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜித், கிண்ணியா உலமா சபை தலைவர் ஹிதாயத்துள்ளாஹ் மௌலவி மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஹஜ் விளையாட்டு விழாவில் சிறுவர்களுக்கான தமிழ் எழுத்துகளை ஒழுங்குபடுத்தல், சமநிலை ஓட்டம், நீர் நிரப்புதல், பழம் பொறுக்குதல், பெரியவர்களுக்கான கிறீஸ் மரம் எறுதல், தலையணைச் சமர், பலூனை பாதுகாத்தல், முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல் போன்ற போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!